இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Tuesday, January 16, 2007

முத்தமிழ் பிறந்தநாள்

அன்பின் முத்தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம், வாழிய நலம்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வரும் ஜனவரி 20, 2007 முத்தமிழ் குழுமத்திற்கு முதலாம் பிறந்தநாள்

ஆம். முத்தமிழ் குழுமம் பிறந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைந்துவிட்டது.

இந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் முத்தமிழ் குழுமத்தில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் முத்தமிழ் வலைப்பதிவிலும், நண்பர் செல்வனின் வலைப்பதிவிலும் தொடர்ந்து இடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன்மூலம் பல படைப்பாளர்களுக்கு வலைப்பதிவுகளின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் பரவலாக அறியப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது முக்கிய படைப்புகள் விக்கிப்பீடியாவிலும் இணைக்கப்படும்.

அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் கட்டுரை , கவிதை மற்றும் சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டிகள் புதுமையானவை. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகளுக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ் மொழி மற்றும் தமிழ் நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது. உங்கள் சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். கட்டுரை மற்றும் சிறுகதை 400 வார்த்தைகளுக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜனவரி 25, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

படைப்புகளை muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்

சிறந்த படைப்புகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

அடுத்து மிக முக்கியமாக இந்த பிறந்த நாளில் முத்தமிழ் குழுமம் ஒரு நல்ல காரியத்தை உங்கள் முன் வைக்கிறது. அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு நூலகங்கள் அமைத்து தரலாம் என முடிவுசெய்துள்ளது. நண்பர் உமாநாத் (விழியன்) இந்தப் பொறுப்பை ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

Citibank Account
Bangalore - Koramangala

A/c No. 5637000804 - Umanath

Ph numbers : 09886217301/ 09894110534 (Tn number)

Mailing Address

S.Umanath
Bluestar Infotech Limited
#7, 18th Main Road,
7th Block
Koramangala -
Bangalore - 560095


முத்தமிழ் பிறந்த நாள் விழா சிறப்பாக அமைய குழும நண்பர்கள் அனைவரும் தங்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு
முத்தமிழ் குழுமம்

எல்லோரும் அவரவரால் முடிந்த கதை, கட்டுரை, புத்தகங்களை கொடுங்கப்பா, முதல் வயதை அடைந்திருக்கும் குழந்தையை அருமையாய் வளர்ப்போம் என்று கூறி விடைபெறுவது உங்கள்
ஸ்ரீஷிவ்...:) @ சிவா...:)
type="text/javascript">&cmt=1&postid=116895423012447813&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது