காதல் வலை - பகுதி 16
அந்த தொலைபேசி அழைப்பு என் தேவதையின் தங்கையிடமிருந்து. எப்போது வீடு திரும்பலாம் எனக்கேட்டு அழைப்பு. 5 மணிக்கு மேல் கிளம்பலாம் என்று தேவதையிடமிருந்து பதில் வர, செல்லத்தொலைபேசி அணைக்கப்பட்டது. பேச ஆரம்பித்தோம், ஏதோ ஆயிரம் ஜென்மத்து சொந்தம் போல், பல்லாண்டு பழகிக்களித்து, பக்கம் உட்கார்ந்து பேசிக்களித்திருந்தது போல் பேசிக்கொண்டிருந்தோம்.
விளையாட்டாக அவளிடம் கேட்டேன், "என் தங்கை கிட்ட பேசறயா மாது?"
"எனக்கு என்ன பயம்? தாராளமா பேசறேன்"
"சரி இந்தா பேசு"
"ஹலோ, யார் பேசுறீங்க? "
"நான் தான் மாது பேசறேன், உங்க அண்ணாவோட ஃப்ரெண்ட்"
------------------
"அந்த ஐ ஏ எஸ் பரீட்சை மெட்டீரியல்ஸ்கொஞ்சம் கிடைக்குமா?"
----------------------
"சரி நான் மறுபடி அப்புறமா ஃபோன் பண்றேன், ரொம்ப தேங்க்ஸ்"
அப்படியே அவள் முகத்தைப்பார்த்துக்கொண்டிருந்தேன், பேசி முடித்த பீதி இன்னும் அவள் முகத்திலிருந்து விலகவில்லை. அப்படியே அவள் விரல்களைப்பிடித்து சொடுக்கெடுத்துவிட்டேன். பின்பு அவள் கால் பாதங்களை எடுத்து என் மடியில் வைத்துக்கொண்டேன், இத்தனை வருடங்களாக நடந்து நடந்தே களைத்த பாதங்கள். மெதுவாக ஒரு பூவைப்போல் தடவிக்கொடுத்தேன்.அந்த கால்களின் விரல்களுக்கு நோகாமல் மெதுவே சொடுக்கெடுத்து விட்டேன், அந்த பூவை நாணத்தால் தன் கால்களை மெதுவே விலக்கிக்கொண்டாள்,"சரி விடு , வேற என்ன வேண்டும்?", "எனக்கு ஒன்னும் வேண்டாம் டா, நீ மட்டும் இருந்தா போதும், இது நடக்குமா ஈஸ்வர்?""ச்சீ, ஏன் இப்படி கவலை படற? , எல்லாம் நல்லபடியா முடியும் டா", " இல்ல ஈஷ், என்னவோ பயமாவே இருக்கு எனக்கு, இது நல்லபடியா முடிஞ்சா, ஸ்ரீரங்கம் போய் ரங்கனாதனுக்கு மொட்டை போட்டுக்கலாம்னு இருக்கேன்" " அவனுக்கு ஏன் நீ மொட்டைபோடனும்? அதுதான் லட்சுமி தினமும் போட்டுக்கிட்டு இருக்காளே அவன் தலையை மொட்டை? ;) ", " ச்சீ போ, எப்பவும் விளையாட்டுத்தான், சாமிக்கிட்ட அப்படி எல்லாம் பேசக்கூடாது, கன்னத்துல போட்டுக்க", " சாமி, சாமி...", "ஏய் என்னைப்பார்த்து ஏன் கன்னத்துல போட்டுக்கற? " " நீதான என்னோட சாமி? " " ஐயோ, அப்பா, தாங்கல, சரி வேற என்ன? எப்போ முடிப்ப உன்னோட தீசிஸ்? , சீக்கிரம் முடிச்சிட்டு வந்தேன்னா அடுத்த வேலையை பார்க்கலாம் இல்ல? " "இன்னும் கொஞ்சம் வேலை இருக்குடா செல்லம்,ஆராய்ச்சி அப்படியே முடிக்கறதுன்னா அவ்ளோ சுலபம் இல்லைடா, முடிச்சிட்டு வந்து உன்னைக்கல்யாணம் செய்துக்கிட்டு, உன்னை அமெரிக்கா வேற கூட்டிக்கிட்டு போகனும், நெறைய திட்டங்கள் இருக்குடா செல்லம், கொஞ்சம் பொறுத்துக்கோ, மாமா சீக்கிரம் வந்திடறேன்", " அது என்ன? செல்லம், செல்லம்னு கூப்பிடற? உனக்கு எப்படி தெரியும்? எனக்கு ஆல்பம் படத்துல வந்த "செல்லமாய்ச்செல்லம் ..."பாட்டு பிடிக்கும்னு? ", "எனக்கு பிடிச்சா, உனக்கும் அது கண்டிப்பா பிடிச்சிருக்கும்னு எனக்கு தெரியாதாடி செல்லம்மா? ", அந்த நேரம் பார்த்து மீண்டும் என் செல்லப்பேசி ஒலிக்க, என் தேவதையின் தங்கையே மீண்டும், "அக்கா கிட்ட கொஞ்சம் செல்ல கொடுங்க", "இந்தா, உன்னோட தங்கை தான்" ............."எப்போ கிளம்பலாம்னு கேட்கறா, மணி இப்பவே 4.30 ஆச்சி, இப்போ கிளம்புனாத்தான் வீட்டுக்கு இருட்டறதுக்கு முன்னாடி போவ முடியும், கிளம்பலாமா ஈஷ்?"
பிரிய மனமின்றி சரி என்று சொன்னேன். வெளியேவந்து ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட மூவுருளி பிடித்து, இல்லம் நோக்கி விரைய, என் கைகளையே பிடித்துக்கொண்டு வந்தாள் என் தேவதை....இறங்கும் இடமும் வந்தது...அங்கு....(தொடரும்)
மன்னிக்கவும் வாசகர்களே, பதிவுகளை இட சற்றே தாமதம் அதிகம் ஆனதாலே சற்று தொய்வு, இனி முடிந்தமட்டில் வாராவாரம் இந்த தொடர் புதுப்பிக்கப்பட்டுவிடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பாசமுடன்,
உங்கள், ஸ்ரீஷிவ்.. type="text/javascript">&cmt=0&postid=116235214694702048&blogurl=http://srishiv.blogspot.com/">