கடந்து வந்த காவியம் பகுதி 9
கடந்து வந்த காவியம் பகுதி 9
அருங்காட்சியகம்...
அது ஒருஅற்புதமான பூங்காவனம்
எத்தனையோ காதலர்களை தன்
கருவறைக்குள் சுமந்த கல்லறைத்தோட்டம்.
இந்த ஏழைக்காதலையும் ஏற்றுக்கொண்டதே
அதில் என்ன ஒரு ரத்த ஓட்டம்?
திமிங்கிலத்து எலும்பு,மானின் தலை இப்படி
திசைகள் எட்டும் திரும்பிப்பார்க்க ஒன்னா
ஒரு திவ்ய தேசம் அந்த அருங்காட்சியகம்.
இருவரும் சிறிது நேரம் உள்ளே சுற்றினோம்
பின் வெளியே வந்து ஒரு படி பார்த்து அமர்ந்துகொண்டு
பேச ஆரம்பித்தாள் என் தத்தை.
ஆஹா, ஒவ்வொரு வார்த்தைகளும்
என் காதுகளில் கவிதையாய்
ஒவ்வொரு எழுத்தும் என் செவியின் சுவையாய்..
அவளின் சகோதரி தன்னவருடன்
தனியே வேறிடம் சென்று செல்லில்
தொலைபேசிடவே, சிறிது
ஆசுவாசப்படுத்திக்கொண்டோம் நாங்கள்.
அப்பொழுதில்தான் அம்மணியின் கால் பிடித்து
கண்ணொற்றி காதலுடன் கேட்டேன்
"கண்மணியே, என்கடைசி வரை கூடவே வருவாயா?"
என்ன இது? என கடிந்து கொண்டாய் நீ,
இருப்பினும் உன் கண்ணிரண்டில்
கண்ணீர்த்துளிகள், என்மீது
அத்தனை அன்பா சிவா??
எத்தனை முறை கேட்டாய் என்னை?
மறவேன் உன்னை மணப்பேன்
என்றும் கையடித்து சத்தியம் செய்தாயே?
கனவுபோல் இல்லையடி அது,
கண்களில் இன்றும் காவியமாய்....
என் தங்கையிடம் பேச
இளங்காற்று அது வீச
லேசாக ஒலித்த என்
செல் தொலைபேசியில்
தங்கையின் குரல்...
யாரது பேசுவது? நான் தான்
நானென்றால்?.. நான் தான்.
சிரிப்பு வந்தது எனக்கு,
சொன்னேன் அவளிடம்
செல் தொலைபேசி அம்மா இது
சென்னைத்தொலைக்காட்சி அல்ல ;)
பேரைச்சொல்லவா? அது ஞாயமாகுமா?
ஹா ஹா ஹா கமலஹாசனின் பாடல்தான்
நினைவிற்கு வந்தது, சொல்லடி என்று நான்
சைகையில் சொல்ல, சொன்னாய் நீயும் உன் பெயர்...
தங்கைக்கும் நல்ல ஞாபகசக்தி என்றே சொல்லவேண்டும்
சட்டென்று உனை நினைவு கூர்ந்தாளே?
பேசி முடித்தாய், பின் உன் தங்கை
செல்லில் அழைத்தாள். மணி பார்க்க,
மாலை 4.20, வீடு போகவேண்டும்,
மீண்டும் ஆட்டோ , அண்ணா சாலை
பாரிமுனை, பிரிகிறாய் நீ..
ஆட்டோவிற்காய் கொடுக்க 10ரூபாய்
சில்லரை இல்லை என்னிடம்,
தந்த உன் பணத்தை ஆட்டோஓட்டிக்கு
அன்பளிப்பாய் பத்துரூபாய் மேலளித்து
அவள்தந்த 10 ருபாயை பொக்கிஷமாய்
என் பர்சில் பதுக்கினேன், பின்
என் விழி மலர் பிதுக்கி விடைபெற்றே
விரைந்தேன் என் தமக்கை இல்லம் நோக்கி...
அடுத்த பகுதி விரைவில்....
உங்கள் சிவா... type="text/javascript">&cmt=0&postid=111511954449685857&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home