கடந்து வந்த காவியம்...பகுதி 2
கடந்து வந்த காவியம்-பகுதி 2
நாம் எங்கு சந்தித்தோம்?
எப்படி சிந்தித்தோம்??
இதய வலிக்கு அடித்தளம் போடுவது
இணைய தளம் ....சரிதானே?
நாம் சந்தித்ததும் சிந்தித்ததும்
அங்குதானே? என்றும் போல
நீயும் உலவ வந்திருப்பாய்
நானும் அதேபோல...
நினைத்திருப்போமா?
நான்கு வருடங்களுக்கு முன்?
நீயும் நானும் இணையத்தில்
இணைவோம் என்று?
எத்தனை சண்டைகள்?
சாடல்கள்? இருப்பினும்
இறக்கவில்லையே நம்
உறவு?? வியக்கிறேனடி
நானே எழுதி இருக்கிறேன்
உறவு என்பது பிரிவுக்காகத்தான் என்று....
சந்தித்த வேளை....நீ
சாதாரணமாகவே தோன்றினாய்....
சாத்திரங்கள் பேசினோம்...
சரித்திரமும் பேசினோம்...
கண்மூடித்திறக்கும் முன்னே
காலங்களும் கடந்தன...
ஒத்த மனம், ஒருமிக்க எடுத்தது
ஒரு முடிவு......மின்னஞ்சலிலும்
தொலைபேசியிலுமே தெரிந்த நீ
நேரில் தெரிந்தது எப்போது???
அயல் மாநிலத்தில்
உயர்கல்விக்காக வந்தவன்....
தாயகம் திரும்ப் தாயை தேடும்
சேயாய் காத்திருந்தேன்....
தாயகம் வந்த நான்
தாயை பார்த்த மறு தினம்..
நோயை நோக்கும் மருத்துவர் போல் ;)
புதுவை நோக்கி என் மிதவையை திருப்பினேன்.....
என் இதயம் இடம்மாறி
இடம் பெற்றிருந்தது அங்குதான்..... type="text/javascript">&cmt=0&postid=111322713953557330&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home