கடந்து வந்த காவியம்...பகுதி 3
கார்பனில் கடைந்தெடுத்த பதுமை
அவள் காலத்தால் கணிக்க ஒன்னாப் புதுமை
காகிதத்தில் வரையமாட்டா ஓவியம்
அவள் காலமகள் எழுதிக்காட்டா காவியம்.
கணினியிலே கண்டெடுத்த கன்னி
எந்த காலத்திலும் என் தங்கைக்கு அண்ணி ;)
முதன் முதலாய் பார்க்கிறேன் உன் முகம்
அதன் முன்பிறுந்தே அறிவேனே உன் அகம்.
கடலோரம் கால் புதைய நடந்தோம்
அந்த காற்றினிலே ஆடிபோல் மிதந்தோம்...
கன்னித்தமிழ் பேசினாள் என் தத்தை
அவள்தானே என் தங்கை மகளின் அத்தை? :)
கதைகள் நூறு இருந்தன நாம் பேச
அங்கு காற்று கூட சப்தமின்றி வீச,
காலத்தையும் நிறுத்தியதெங்கள் பேச்சு
அந்தக் காற்று கூட விட்டதோ பெருமூச்சு!!.
உணவகத்தில் ஏதோ ஒன்றை உண்டோம்
ஆனால் ஒருவ்ர் கண்ணில் ஒருவர் முக்ம் கண்டோம்!!
காதலாக கனியும் என்றா கண்டோம்?
எனினும் அதை காலச்சுவட்டில் பதிவெடுத்துக்கொண்டோம்...
கற்பூர புத்தியடி உன் மூளை
அதில் கட்டுண்டேனே இந்த காளை!!!
இருவருமே இல்லம் திரும்பிச்சென்றோம்,
அங்கு இயல்பு தந்து இதயம் வாங்கி சென்றோம்...
உடைந்திருந்த சிற்பமடி நானே
அதை உளிகொண்டு திருத்த வந்தாய் நீயே....
கன்னி உன்னைக் கண்ணில் காட்டித்தந்த அந்த
கணிப்பொறிக்கு கோடி நமஸ்காரம்.... type="text/javascript">&cmt=0&postid=111334059552914995&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home