கடந்து வந்த காவியம்-பகுதி 8
கடந்து வந்த காவியம்- பகுதி 8
உணவகத்தில் சிறு இருட்டு
என் உள்ளத்தில் இல்லை திருட்டு ;)
மனதிற்கு அமைதி தரும் பொருட்டு
அமைந்தது அந்த இருட்டு...
விடிவெள்ளியாய் என் அருகில்
அவளின் ஒளிமிகுந்த கண்கள்,
இருளினில் என் தேவதை அந்த
விண்மீனாய் விளக்காய்,
விடியலின் கிழக்காய்.
ஏதோ சொல்லவும் வருகிறாள்
பின் செல்லவும் செல்கிறாள்,
மிக மெல்லிய வெட்கத்துடன்
அவள் கைப்பை பிரித்து
ஏதோ ஒரு பொருள் எடுத்து
என் கைப்பிரித்து வைத்தாள்.
என்ன அது? எனக்குள் ஒரு கேள்வி,
வெடி குண்டா? ;)
இல்லை கல்கண்டா?:)
இரண்டும் இல்லை,
இசையுடன் கூடிய
இரு சிறு குழந்தைகள்
விசை தட்டினால்
"I love you" சொல்லியபடி
சுற்றிவந்து முத்தமிடும் ஒரு
அற்புதமான காதல் பரிசு.
நன்றி கூறிய என் தலையில்
நறுக்கென ஒரு கொட்டு )
எதற்கு எனக்கு நன்றி?
உனக்கு நீயே நன்றி சொல்வாயா?
வலிக்கவே இல்லை,
விந்தையில்லையே அது?
விதைத்தவன் அறுத்தால்
வயலுக்கு வலிக்குமா??
தாய்ப்பூனை வாயில் கவ்வ
சேய்க்கு வலிக்குமா?
"என்ன சாப்பிடற?" அவளை
முதலில் கேட்ட கேள்வி
என்று நினைக்கிறேன்.
"ஏதாச்சும் சொல்லு" அவள்
சொன்ன பதில்.
என்ன இருக்கு? என்று
காப்பாளரிடம் நான் கேட்க
எடுத்து வந்து கொடுத்தார்
உணவுப் பட்டியலை.
நிறைய உணவுகள் இருக்க
எதை உண்பது என்று ஒரு
சிறு விவாதம், அவளுக்கும்
எனக்கும் பிடித்த உணவு
என்ன இருக்கிறதென்று பார்க்க,
மீண்டும் எங்கள் கண் முன்
வந்தது, நாங்கள் பாண்டியில்
உயிர் விட்டு உண்ட
தயிர் சாதம் ;)
ஊறுகாய் தொட்டுக்கொண்டு
தயிர் சாதத்தை உயிர்சாதமாய்
உண்டோம் இருவரும்.
வழக்கம் போலவே என்
கரங்களை உபயோகிக்காமல்
கரண்டியை உபயோகிக்க,
கலங்கினாள் என் கண்மனி.
கரண்டி பிடித்து உண்டதில்ல சிவா
என மிரண்டபடியே சொன்னவளை
கன்னத்தில் தட்டிக்கொடுத்து ஆறுதலாய்
கரண்டியை விடுத்து கரத்தை எடுத்தேன்.
காதலின் சக்தி கரண்டியை விட அதிகமே :)
உணவு உண்ட பின்னர் வெளியே வந்து
என்ன வேண்டுமென்று கேட்க,
பனிக்கூழ் வேண்டுமென்றே பணித்தாள்
என்னை, தெருவெங்கும் தேட
கிட்டவில்லை அன்று பனிக்கூழ்..:(
சரி விடு என்று கூறி
சாலைக்கு வந்தோம்,
அடுத்து எங்கு? என் கேள்விக்கு
அடுக்காக பதில் இருந்தது,
கன்னிமாரா நூலகம் :)
அங்கு என்ன இருக்கு?
அழகாக வந்த பதிலில்
அகமும் மகிழ்ந்தேன்,
அப்துல்கலாம் வந்து நேற்றுதான்
திறந்து வைத்துப்போனார் அந்த
அருங்காட்சியகத்தை,
அழகாக விளம்பினாள் என் மன
அல்லி :)
ஆட்டோ பிடித்து
அபு பேலசிலிருந்து
அருங்காட்சியகம் நோக்கி
அருகமர்ந்தே சென்றோம்
ஆதர்ஷத்தம்பதிகளாய்..அங்கு....
அடுத்த பகுதியில் தொடர்வேன், உங்கள் விமர்சனங்கள் கண்டு.....:)
அன்புடன்
சிவா... type="text/javascript">&cmt=0&postid=111501468912161503&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home