இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Sunday, May 01, 2005

கடந்து வந்த காவியம்-பகுதி 7

கடந்து வந்த காவியம்-பகுதி 7

இரண்டு நாட்கள் வீட்டில்
அம்மா....அந்த வார்த்தை
அதன் சக்தி? அப்ப்ப்பா...
எவ்வளவு பாசம்?

ஆறு மாதங்களே வெளியே,
அருகமரவைத்து என்
கையில் சாதம் உருட்டி
என் பாசத்தை பிரட்டி
தந்தாயே பால் திரட்டி...

மூன்றாம் நாள் வரவே
முழு நிலவைப் பெறவே
கிளம்பினேன் சென்னை
சந்திக்கவே உன்னை.

தமக்கை வீட்டில் எனக்கு
ஒரு சிறிய பிணக்கு,
ஆனாலும் உனைப்பார்க்க
எனை அக்கா வீட்டில் சேர்க்க
வந்ததே தொலைபேசி அந்த
நிலவின் ஒலி வீசி...

எங்கு சந்தித்தோம் நாம்?
பாரி முனை....அனைத்து
பேருந்துகளும் சங்கமமாகுமிடம்,
நம் சங்கமமும் அங்குதானல்லவா?

காலை மணி பத்து என்
காவியத்தின் முத்து.
கண்டேன் உனை மீண்டும்
உன் பார்வை எனைத் தூண்டும்...

அருங்காட்சியகம் செல்ல
அந்த ஆட்டோவை அழைத்தேன் மெல்ல,
காலை மணி பதினொன்று,
நாள் நாளாக கழித்து சந்தித்த நீ
நாம் நாம் என தவித்திருந்த நான்...

முதலில் தொட்டது
உன் காலை, அதில்
மதி இழந்தேன் இந்த காளை ;)
சப்தமில்லாத அந்த கொலுசு
அதில் சலனமடைந்ததே என் மனசு...

அதிகம் பேச வார்த்தைகள் இல்லை
நாம் பேச அந்த வானமே எல்லை...
அப்போழுது தந்த அந்த பொம்மை
சாவி கொடுத்தால் தன் காதலை சொல்லுமே?
அதனுடன் கல்கியின் "பொன்னியின் செல்வன்"
எத்தனை பரிசுகள்? அதனுடன் ஒரு புகைப்படம்....

அனைத்தும் வாங்கி பின்
அதிகம் பேசி, பசியில் கேட்டேன்
உண்போமா கண்ணே?
உன்னையே உண்டுகொண்டிருக்கிறேனே?
எனக்கு எதற்கு உணவு? எத்தனை
கவித்துவமாக பேசினாயடி???

இருப்பினும் செவிக்கு உணவு முடியுமுன்
சிறிது வயிற்றுக்கும் ஈய வேண்டி,
நாங்கள் கிளம்பினோம் பஜார் பாண்டி :)
ஒரு நல்ல 5 நட்சத்திர உணவு விடுதி,
அபு பேலஸ் என்று நினைவு.....அங்கு
நாங்கள் உண்டது ஒரு தனிக்கதை,
அதை அடுத்த பகுதியில் அகவுவேன்....:)
type="text/javascript">&cmt=0&postid=111501423155973487&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது