மாமணியே...
தங்கம் , தாமிரம், துத்தநாகம்
தகரம், தோரியம், தவிட்டுப்பொன்
இவையாவும், தங்கை உன் சிரிப்பில்
தவிடுபொடியாய் போனதே என் தாயே
உன் தந்தப்பாதங்களுக்கு துலாபாரத்தில்
எடையெடுத்து, விலா எலும்புகள் வெளித்தெரியும்
தெருவோரத்தங்கைக்கும் ஒரு தங்கச்சங்கிலி
செய்து தருவேன் என் திருவே, திருவிளக்கே,
தெய்வத்தின் தேவதருவே,
தென் பெண்ணை ஆற்றின் ஓரம்
தெருவெல்லாம் தோரணமாம்
மண் வீடும் மாளிகையாம்
மணல்சோறும் விருந்துணவாம்,
வெண்பட்டு அதை உடுத்தி
வேந்தன் அவன் கை பிடித்து
மறுவீடு செல்லும் வரை
மலராலே தாங்கிடுவேன்,
மணவாளன் இடையினிலே
மறு வீடு ஏகிடினும்
மறவாதே என் தங்காய்
மாளிகையே இங்கு உண்டு
கண்ணீரை கண்டாலும்
சென்ணீரால் சுருண்டாலும்
பன்னீரால் குளிப்பாட்டி
பல்லக்கில் உனை ஏற்றி
பலகாத தூரமெனினும்
பண்பாக எடுத்து சென்று
மணவாளன் இல்லம் சேர்க்கும்
மகிழ்வான நாளும் என்றோ????? type="text/javascript">&cmt=2&postid=115709606541959264&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
திரு. சிவஷங்கர்,
இன்றுதான் உங்கள் வலைப்பூவைப் பார்க்கின்ற வாய்ப்பு கிட்டியது. பல்சுவை பரிமளிக்கின்றது. வாழ்த்துக்கள்.
"மாமணியே" கவிதை ரசிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால், மணவாளன் மறுவீடு ஏகினாலும் என்ற வார்த்தைகள் பொருத்தமின்றி அபஸ்வரமாய் ஒலிக்கின்றன. தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
பலவிதங்களில் உங்களுடன் ஒத்த சிந்தனை உடைய ஒரு பல்கலை வித்தகர் ஒரு தளம் வைத்துள்ளார். முடிந்தால் போய்ப் பார்த்து ரசியுங்கள்.
www.geocities.com/magudadeepan
தமிழ்நாட்டிலுள்ள ஒரு பெரிய வைணவத்தலம் திருப்புல்லாணி. அந்த ஊர் பெருமாளையும் திருக்குறளையும் இணைத்து "திருப்புல்லாணி மாலை" என ஒரு அருமையான நூல் உள்ளது. http://traveeda.blogspot.comல் தினம் ஒரு பாடலாக மலர்கின்றது.
வாழ்த்துக்களுடன்,
ரகுவீரதயாள்
Monday, September 04, 2006 12:20:00 PM
அன்பின் திரு.ரகுவீரதயாளரே வணக்கம்,
என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா, உண்மையில் சொன்னால் இந்த கவிதை நான் யோசித்து அமர்ந்து எழுதியது இல்லை, என் தோழன் திரு.தியாகராசன் , எங்கள் முத்தமிழ் கூகிள் குழுமத்தில் இட்ட ஒரு கவிதைக்கு உடனடியாக எழுதிய ஒரு எதிர்கவிதை, பாட்டுக்குப்பாட்டு மாதிரி வைத்துக்கொள்ளுங்களேன் :), அதனால்தான் அந்த வரிகள் வந்தன, அதுகூட எனக்கு ஏதும் தவறாகப்படவில்லை, அப்படியே அவன் இறந்தாலும் நம் வீட்டில் உன்னை வைத்துக்காப்பேன் என்று தான் கூறி இருக்கின்றேன், மிக்க நன்றி.
ஸ்ரீஷிவ்..
பி.கு : என் பெயர் சிவசங்கர், ஷ வராது ஐயா :)
Monday, September 04, 2006 10:48:00 PM
Post a Comment
<< Home