எட்டு
வானத்தை எட்டு, சூரியனை எட்டு, சந்திரனை எட்டு, சுக்ரன், வெள்ளியை எட்டு, இப்படி எதையேனும் எட்டச்சொல்லி சின்னவயசுல இருந்து பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா சொல்லி வந்ததுதான், :) இன்னைக்கு நம்ம ராதா அவர்கள் நம்மளை வாழ்க்கையை எட்டு, எட்டா பிரிச்சி எழுதச்சொல்லி இருக்காங்க. சரி அப்படி எழுதித்தான் பார்ப்போமேனு இந்த முயற்சி, வாழ்வில் நான் பெற்ற இழந்த எட்டுக்கள் அதிகம்.எட்டுக்கு அடுத்த நாளில் நான் பிறந்தேன், :) மார்ச் 9 என் பிறந்த தினம்,ம்ம்ம்ம்...என் வாழ்வில் நிகழ்ந்த எட்டு நிகழ்வுகள் இங்கே உங்கள் பார்வைக்கு:
1) மார்ச் 9, 1973 நான் பிறந்தேன் இந்த பாரதத்திருநாட்டில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கண்மாநகரில்.
2) 8 வயசுல, சைக்கிள் ஓட்ட கத்துக்கொண்டேன், அப்போ பிரேக் இல்லாத சைக்கிளில் பின்னாடி ஒரு அண்ணன் பிடித்துக்கொண்டே ஓடிவர, ஆர்வக்கோளாறில் சற்று வேகமாக அழுத்தி மிதிக்க, அவர் என் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் விட்டுவிட, பிரேக் பிடிக்க முடியாமல், வேகமாக சைக்கிளை 30 கிலோமீட்டர் விரைவில் ஓட்டிச்சென்று ஒரு முள்ளுச்செடி புதருக்குள் சொருகி, அதிலிருந்த பூனைக்காய்ச்சல் செடி உடலெல்லாம் காந்து காந்தெனக்காந்தி, தடுப்பு தடுப்பாக வீங்கி, மருத்துவரிடம் போய் உடலெல்லாம் டர்பன் தைலம் தேய்த்து, மின்விசிறி கீழ் அமர்ந்து ஓய்வெடுத்தேன்.
3) 17 வயசுல (கூட்டினா எட்டு வருதுங்களா? ;) )வீணாப்போன ஒரு காதலால், இந்த நாட்டுக்குக்கிடைக்க இருந்த ஒரு தலை சிறந்த மருத்துவன் கிடைக்காமல் போய், இன்னைக்கு ஒரு முனைவனா இந்த நாட்டிற்கு தன்னை அற்பணிக்கின்றான்.அந்த புன்னியவதிக்கு கல்யாணம் ஆகி, இன்று ஒரு குழந்தையும் கையில் வந்தாயிற்று.:) நினைத்தால் சிரிப்பாகவே வருகின்றது.
4) பொறியியல் இளையர் பட்டப்படிப்பை ஆதிபராசக்தி பொறியியற்கல்லூரியில் 1994ல் முடித்துவிட்டு,கணினியுதவியுடன்கூடிய வடிவமைப்பியல் (இயந்திரவியல்) கல்வியை முது பொறியியல் பட்டத்திற்காக அரசு பொறியியற் கல்லூரி, சேலம் ல் 1997ல் முடித்து, 1999ல் அருணை பொறியியற்கல்லூரியில் மூத்த விரிவுரையாளராகப்பணியேற்றேன்.)
5) மூனறு வருடங்கள் சீரிய ஆசிரியப்பணிக்குப்பின், 2001 ஆகஸ்ட்ல், ஐஐடி குவஹாத்தி, அசாம் மானிலத்திற்கு முனைவர் ஆராய்ச்சிப்பட்டத்திற்காக வந்தவன் இன்னும் இங்கேயே, இடுப்பெலும்பில் ஆராய்ச்சி செய்துவருகின்றேன்.
6) ஆராய்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள், சென்ற வருடம், நான் ஆராய்ச்சி செய்த ஒரு இடுப்பெலும்பிற்கு சொந்தக்காரரின் ஆவி, வேறு ஒரு நண்பர் மூலமாக என்னைத்தொடர்புகொண்டு, நான் பயந்து, அதற்கப்புறம் அந்த நண்பர் நட்பையே உதறியது எல்லாம் அடுத்த கதைகள். :)
7) ஐஐடி குவஹாத்தி, என் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கு வகித்த/வகித்துக்கொண்டிருக்கும் ஒரு இனிமையான கல்விக்கூடம். என்னை ஒரு முனைவனாக, கவிஞனாக, பக்குவமடைந்தவனாக, நண்பனாக மாற்றிய அனைத்து பெருமைகளும் ஐஐடி குவஹாத்திக்கே சேரும். இங்கு வந்தபுதிதில் நல்ல சாப்பாட்டிற்கே வழியில்லாமல் திண்டாடி, சிறிது சிறிதாக எங்கள் விடுதி உணவுக்கூடத்திலேயே தென்னிந்திய உணவுவகைகளை சமைக்கவைக்கும் அளவு தேறிவிட்டோம் :), ஆனால் முனைவர் ஆவதற்கு எடுத்த காலமே வெகு அதிகம், 6 ஆண்டுகள்......வாழ்வைத்தொலைத்து ஒரு வாழ்வைத்தேடி, வாழ்வு பெற்று நின்றிருக்கின்றேன்.
8) இணைய நட்பு, இது குறித்து கூறாமல் இந்த 8நிறைவுறாது, என் ஆய்வுப்பணியிலும் சரி, என் சொந்த வாழ்விலும் சரி, நேரிலே பாராமலே எந்த விதமான சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற உதவிய/உதவும்/உதவப்போகும் உங்களுக்கு நன்றி கூறி, அடுத்த 8 பேரை வந்து கலக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்...:)
ஸ்ரீஷிவ்...அசாமிலிருந்து...
அடுத்து நான் அழைப்பது:
1) மஞ்சூர் ராசா அண்ணா
2) டி பி ஆர் ஜோசப் ஐயா
3) விசாலம் அம்மா
4) கீதா அம்மா
5) தியாகு தலை
6) நம்பிக்கை ராமா
7) பூர்ணா????
8) செந்தழல் ரவி
அவ்ளோதான்....:) type="text/javascript">&cmt=0&postid=3338584490831370390&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home