இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்...
இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....
அன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதி
ஞாயிறுகாலை 10.00 மணியளவில் கோவையில் இணைய நண்பர்கள்
சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நண்பர்களையும்
வருக, வருக என இனிதே வரவேற்கிறேம்.
சில கேள்வியும் & பதிலும்...
முதலில் இது எதற்க்கு? அவசியம் என்ன?
குழுமங்கள் மற்றும் பல இணைய நண்பர்களின் நீண்ட நாள் சந்திப்புதிட்டம் செயலுக்கு வந்துள்ளது.
யார், யார் கலந்துக்க?
நீங்கள் வலைபதிவராகதான் இருக்கனும் என்று அவசியமில்லை, குழுமங்களில் கலக்குபவராக இருக்கலாம்,
மன்றங்களில் வெழுத்துக் கட்டுபவர்களாக இருக்கலாம், இணைய தளங்களில் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்களாக
இருக்கலாம். அட அவ்வளவு ஏனுங்க சும்மா நடப்பதை எல்லாம்வேடிக்கை பார்ப்பவராக இருக்கலாம். இணையம்
மற்றும் தமிழ் இவ்விரண்டேநம்மை இணைப்பதாக இருக்கும்.
எதைப் பற்றி பேச?
பல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசலாம். விரைவில் தலைப்புகள்பட்டியலிட படும்.
அட இன்னமும் கிளம்பலையா...?
சரி சரி நீங்க கேட்பது புரியுது யாரை தொடர்புக் கொள்ளனும் என்பது தானே உங்க கேள்வி...
முத்தமிழ் மஞ்சூர் ராசா - 9443854163
தமிழ்பயணி சிவா - 9894790836
மின்னஞ்சல் முகவரி - vanusuya@gmail.com
வருகை தருபவர்கள் தவறாது முன்னதாக தொடர்புக் கொண்டால் தேவையான வசதிகள் செய்ய உதவியாக இருக்கும்.
இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....
அன்புடன்,
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=2&postid=4676262740327835970&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைச்சிருக்கேன் முடிஞ்சப்போ எழுதுங்க......!
Saturday, June 30, 2007 11:28:00 PM
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
எல்லாருக்குமே இந்த விதிகள் தெரிஞ்சிருக்கும்னுதான் எழுதல......இப்ப தூள் கிளப்புங்க.....உங்களை ரொம்ப நாளா எனக்கு தெரியுமே...என்ன மாதிரி நீங்களும் எப்பாவாவது எழுதரவர்ன்னு...:):)
Sunday, July 01, 2007 8:54:00 AM
Post a Comment
<< Home