செயற்கை கருப்பை - சென்னை மருத்துவமனை சாதனை
பெண்ணுக்கு செயற்கை கருப்பை சென்னை மருத்துவமனை சாதனை
சென்னை : ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு செயற்கை முறையில் கருப்பையை உருவாக்கி, சென்னை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சாதனை படைத்துள்ளது. ஆகாஷ் குழந்தையின்மை மருத்துவமனை டாக்டர் ஜெயராணி காமராஜ் கூறியதாவது: இந்தியாவில் மருத்துவ செலவுகள் குறைவாக இருப்பதால் பல நாட்டவர்களும் சிகிச்சைக்காக இந்தியாவை நோக்கி படையெடுக்கின்றனர். பிறவியிலேயே கருப்பை இல்லாத ஓமன் நாட்டைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மனைவி சாமியா அலி(30) என்பவர் தனக்கு கருப்பை இல்லை என்றும், ஆனாலும் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், கணவர் விரும்புவதால் செயற்கை முறையில் கருப்பையை உருவாக்கி தர வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து, சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ராஜமகேஷ்வரி மற்றும் எனது தலைமையிலான மருத்துவக் குழு, சாமியா அலியை ஆறு மாதங்களாக ஆய்வு செய்தது. பின்னர் சிகிச்சைக்காக தயார் செய்தோம். பொதுவாக ஆயிரத்து 500 பேரில் ஒருவருக்கு பிறவியிலேயே கருப்பை இல்லாத பிரச்னை ஏற்படுகிறது. இவர்களுக்கு மற்ற பெண்களைப்போல் சினைப்பை இருக்கும். இதனால் இவர்கள் மற்ற பெண்களை போல் இயல்பாக இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது. இந்த பிரச்னைக்கு "முல்லேரியன் டிஸ் ஜெனிசிஸ்' என்று பெயர். கருப்பை இல்லாமல் சினைப்பை மட்டும் உ<ள்ள பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாதென்பதால், வாடகைத் தாய் மூலம் கணவரின் உயிரணுவை தங்களின் கரு முட்டையுடன் இணைத்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். சாமியா அலிக்கு பரம்பரை காரணமாக குறைபாடு ஏற்படவில்லை என்பதால் சிகிச்சை மூலம் கருப்பையை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சாமியா அலியின் கருவுறுப்பை ஆய்வு செய்யும் போது இரண்டு கருக்குழாய்களும், சினைப்பையும் இருப்பது தெரியவந்தது. கருப்பை இருக்க வேண்டிய இடத்தில் சிறிய தசை அமைப்பு மட்டுமே இருந்தது. இந்த தசையை மிக நுட்பமாக பிரித்து முழுமையான கருப்பையை நாங்கள் உருவாக்கினோம். இந்த அறுவை சிகிச்சை எட்டு மணி நேரம் நீடித்தது. அறுவை சிகிச்சைக்குப் பின், ஹார்மோன் மருந்துகள், கருப்பையை வளர்ச்சியடையச் செய்யும் மருந்துகள் ஆகியவற்றை செலுத்தி கருப்பை வளர்ச்சியை உறுதி செய்தோம். இதில் 3.6 செ.மீ., அளவில் இருந்து 4.4 செ.மீ., வரை தற்போது கருப்பை வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது சாமியா அலிக்கு ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படுவதை தொடர்ந்து, அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இது போன்ற பிரச்னையுள்ள பல பெண்கள் தற்போது எங்களை அணுகியுள்ளனர். இந்த சிகிச்சை நடந்த விதம் பற்றிய கருத்தரங்கம் வரும் 24ம் தேதி சென்னை வடபழனியிலுள்ள அம்பிகா எம்பையர் ஓட்டலில் நடக்கிறது. இதில் 500க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். இதில் தற்போது சிகிச்சை பெற்றுள்ள சாமியா அலியும் தன் கணவருடன் கலந்து கொள்கிறார். இவ்வாறு ஜெயராணி காமராஜ் கூறினார்.
சுட்டி : http://www.dinamalar.com/2007june22/general_tn8.asp type="text/javascript">&cmt=3&postid=2286874347428711107&blogurl=http://srishiv.blogspot.com/">
3 Comments:
இன்னிக்கு தினமலர்லே பார்த்ததும் உங்க நினைவுதான் வந்துச்சு.
Friday, June 22, 2007 3:40:00 AM
நன்றி அம்மா...:)அறிவியல் அற்புதம் உண்மையில் இது...வாழ்க, யாரேனும் இதுகுறித்து முழு விவரம் அறிந்தவர்கள் தகவல் கொடுத்தால் மகிழ்வேன், மருத்துவமனை விலாசம், மருத்துவர் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்...வேண்டும்
Friday, June 22, 2007 4:19:00 AM
நல்ல தகவல் பகிர்வு நன்றி...........
Thursday, January 03, 2013 8:07:00 AM
Post a Comment
<< Home