சிவில் சர்வீஸ் தேர்வு - கட்ஆப் மார்க்கை வெளியிட உத்தரவு
கட்ஆப் மார்க்கை வெளியிட உத்தரவு
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிட வேண்டுமென்று யு.பி.எஸ்.சி.,க்கு மத்தியதகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் 6 மாத கால போராட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டால், மிகப் பெரிய ஊழல் வெடிக்கும் என்ற பரபரப்பு டில்லி வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான தேர்வுகளை டில்லியில் உள்ள யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பொதுத் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த இந்த சிவில் சர்வீஸ் தேர்வின் முதற்கட்டத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.இதனால் யு.பி.எஸ்.சி.,க்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். தகவல்அறியும் உரிமைச் சட்டத்தை மாணவர்கள் நாடினர்.
பல்வேறு வாய்தாக்களுக்கு பிறகு, இவ்விவகாரத்தை விசாரணை நடத்திய மத்திய தகவல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு தனது தீர்ப்பை அறிவித்தது. மொத்தம் 16 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பை மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் வஜாகத் அபிபுல்லா வெளியிட்டார். அதன்படி," 2006ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதற்கட்டதேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிட வேண்டும். முதற்கட்ட தேர்வில் உள்ள ஜெனரல் ஸ்டடீஸ்எனப்படும் பொது விஷயங்கள் மற்றும் 23 ஆப்ஷனல் பேப்பர்களுக்கான மதிப்பெண்களை வெளியிடவேண்டும்.முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று பட்டியலிடப்பட்டிருக்கும் மாணவர்கள் என்ன மதிப்பெண்கள்பெற்றனர் என்பது குறித்த கட்ஆப் மார்க் விவரங்களையும் வெளியிட வேண்டும். கட்ஆப் மார்க் என்ற சிஸ்டம் யு.பி.எஸ்.சி.,யில் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அவ்வா கட்ஆப் சிஸ்டம் இல்லையெனில், முதற்கட்ட தேர்வில்தேர்வாகியிருக்கும் மாணவர்கள் ஒவ்வொரும் தனித்தனியாக பாடங்கள் வாரியாக எத்தனை மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பதையும் வெளியிட வேண்டும். இவை அனைத்தையும் இரண்டு வாரங்களுக்கு யு.பி.எஸ்.சி., வெளியிட்டாக வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு டில்லியில் மாணவர்கள் மத்தியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மாணவர்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாக கூறப்பட்டாலும், யு.பி.எஸ்.சி., தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து மாணவர்கள் போராட்டக்குழு தலைவர் சுனிலிடம் கேட்டபோது,"எங்கள் கோரிக்கையை இழுத்தடித்த யு.பி.எஸ்.சி.,க்கு மத்திய தகவல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு மூலம் சரியான பதிலடி கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த தீர்ப்புக்கு பிறகும்எங்களுக்கு நியாயம் கிடைத்துவிடுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம் இந்த தீர்ப்பை எதிர்த்து யு.பி.எஸ்.சி., கோர்ட்டுக்கு செல்வதற்கே வாய்ப்புள்ளது. இதை தடுக்க வேண்டுமென்பதற்காக அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசின் கருணையை எதிர்பார்க்கிறோம். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க திட்டமிட்டு எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி விண்ணப்பித்துள்ளோம்,' என்று கூறினார்.
இதற்கிடையில் மத்திய தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பு யு.பி.எஸ்.சி.,க்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளதாககூறப்படுகிறது. இந்த தீர்ப்பின்படி மாணவர்களின் கட்ஆப் மார்க்கை வெளியட்டாக வேண்டிய கட்டாயம் யு.பி.எஸ்.சி.,க்குஏற்பட்டுள்ளது. அவ்வாறு மதிப்பெண்களை வெளியிட்டால், தற்போது முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளமாணவர்களின் உண்மை நிலை வெளியே தெரிய வரும். மிகப்பெரிய அளவில் நடந்துள்ள ஊழல்கள் வெடிக்கவும்வாய்ப்புள்ளதால் தேசிய அளவில் இப்பிரச்னை பெரிய அளவில் உருவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தேர்வுமுடித்து மெயின் தேர்வுக்கு சென்றுள்ள மாணவர்கள் பலரது கதி என்னவாகும் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்குஒரு நல்ல வாய்ப்பபு இதுவரை சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, தாங்கள் வாங்கும் மதிப்பெண்கள் என்னவென்றே தெரியாத நிலை இருந்தது. இதனால் வெற்றிக்கான எல்லை எது என்பதெல்லாம் தெரியாமலேயே இருந்தது.நாட்டிலேயே பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சிறந்து விளங்குவது தமிழகம் தான். மற்ற மாநில மாணவர்களோடு
ஒப்பிடும்போது தமிழக மாணவர்களுக்கு போட்டிபோட்டு வெற்றி பெறும்மனப்பான்மை அதிகம். இதுவரை சிவில் சர்வீஸ் தேர்வுகளின் மூடுமந்திரம் தெரியாமலேயே இருக்க நேர்ந்தது. தற்போதையதீர்ப்பினால் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவதை அதிகரிக்கும் சூட்சுமம் என்னவென்பதை கண்டறிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாங்கள் எதற்காக சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வியடைகிறோம்
என்பதே தெரியாமல் இருந்து வந்த நிலையும் மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மாணவர்கள் டில்லியில்தெரிவித்தனர்.
தகவல் : தினமலர்.காம் type="text/javascript">&cmt=2&postid=116361949945019080&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
சார்
நல்ல தகவல்.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
நீங்கள் இருக்கும் பக்கம் கலவரம் என்று பதிவிட்டிருந்தீர்கள். இப்பொழுது நிலைமை பரவாயில்லையா?
Wednesday, November 15, 2006 11:56:00 AM
இப்போ கொஞ்சம் பரவாயில்லைங்க சிவபாலன், வினவலுக்கு நன்றி
ஸ்ரீஷிவ்..:)
Wednesday, November 15, 2006 11:59:00 AM
Post a Comment
<< Home