இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, November 20, 2006

இன்று "ஹலோ' சொல்லுங்கள்...!

இன்று "ஹலோ' சொல்லுங்கள்...!


இன்று உலக "ஹலோ' தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் மறந்து போன அல்லது விடுபட்டுப்போன நல்ல நண்பர்களை தேடிப்பிடித்து குறைந்த பட்சம் "ஹலோ' சொல்வதையே இத்தினம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அத்துடன் அமைதிக்காகவும் இத்தினத்தில் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

1973ம் ஆண்டில் எகிப்து மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட தகராறையொட்டி இத்தினம் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 180 நாடுகளில் இந்த "ஹலோ' தினம் கொண்டாடப்படுகிறது.

தற்போது தொலை தொடர்புத் துறை வளர்ந்துவிட்டது. ஆகவே, உலகின் ஒரு மூலையில் உள்ள ஒருவர் இன்னொரு மூலையில் உள்ளவரை உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியும். இமெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் இத்தினத்தின் நோக்கம் ஒருவர் மற்றொருவருடன் நேரடியாக பேச வேண்டும் என்பதுதான். ஆகவே, தொலைபேசி மற்றும் மொபைல் போன்களைப் பயன்படுத்தி இன்று குறைந்த பட்சம் பத்துப் பேரிடமாவது பேச வேண்டும் என்று உலக "ஹலோ' தின செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பிற முக்கிய தினங்களைப் போலவே, இத்தினத்துக்கும் வாழ்த்து அட்டைகளும் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. ஒருவேளை "ஹலோ' சொல்ல முடியாத பட்சத்தில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொள்ளலாம். உலக "ஹலோ' தின அமைப்பு அமைதி நோபல் பரிசு பெற்ற அறிஞர்களிடம் இருந்து கடிதங்களைப் பெற்றுள்ளது. இதில் அவர்கள் இந்த உலகம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.

"ஹலோ' எனும் வார்த்தைதான் இரு தெரியாத நபர்களைக் கூட ஒன்றிணைக்கிறது. ஆகவே, "ஹலோ' எனும் வார்த்தைக்கு பல்வேறு மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்வதன் மூலம் நட்புக் கொள்வது எளிதாகும்.

மாணவர்களைப் பொறுத்தவரை பிற நாட்டு மொழிகளை கற்றுக் கொள்ள இத்தினம் உதவும். இத்தினத்தில் "ஹலோ', குட்பை மற்றும் பீஸ் ஆகிய வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் கற்றுக் கொள்வது சர்வதேச மொழிகளை அறிந்து கொள்ள உதவும்.

சில மொழிகளில் "ஹலோ' என்பதற்கு உள்ள அர்த்தம் கீழே:

கோனிச்சிவா ஜப்பானீஷ்

ஜம்போ ஸ்வாஹிலி

ஹோலா ஸ்பானிஷ்

நி ஹாவோ சைனிஷ்

பாஞ்சோர் பிரெஞ்சு

புயான் கியார்னோ இத்தாலியன்

அன்னியோங் ஹா ஷிம்னிக்கா கொரியன்

செஸ்க் போலிஷ்

ட்ராவ்ஸ்ட்வைட் ரஷ்யன்

இது போன்று இன்னும் சில மொழிகளில் எவ்வாறு "ஹலோ' எனும் வார்த்தை கூறப்படுகின்றன என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்று சர்வதேச "ஹலோ' தினம்.
type="text/javascript">&cmt=1&postid=116407646045133704&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger SurveySan said...

எல்லாம் சரிதான் ஹலோ க்கு தமிழ்ல இன்னா தல?
;)

Monday, November 20, 2006 8:50:00 PM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது