சுவாமியே சரணம் ஐயப்பா...
சபரிமலைக்குப் புறப்படுவோம்

மாலை அணியும்போது சொல்லும் மந்திரம் :
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்
சாந்த முத்ராம் சத்தியமுத்ராம் வ்ருதுமுத்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே-
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்
சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம:அ
மாலை கழற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - தேஹமே விரத விமோசனம்

மூன்று பணிகள் : சபரிமலையின் ராஜாவான ஐயப்பன் மூன்று செயல்களை செவ்வனே முடிப்பதற்காக அவதாரம் எடுத்தார். அசுரகுல அரசன் பிரம்மாசுரனை அழித்திட, தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்
படுத்தும் மகிஷி எனும் அரக்கியை அழிக்க, குழந்தை பாக்கியம் இல்லாத சிவபக்தரான ராஜசேகர மன்னனுக்கு குழந்தை பேறு கிடைக்கச் செய்ய. இப்பணிகளைக் குறுகிய காலத்தில் முடித்து விட்டார் ஐயப்பன்.

தவமிருக்கும் ஐயப்பன்:தான் அவதாரம் எடுத்து வந்ததன் அநாக்கத்தை முடித்த ஐயப்பன், பம்பை நதிக்கரையில் தவம் இருக்கப்போவதாக தனது வளர்ப்புத் தந்தை பந்தள மகாராஜாவிடம் சொல்லிவிட்டு சபரிமலைக்கு வந்துவிட்டார். இவர், கார்த்திகை முதல் நாளில் இருந்து மார்கழி 11 வரையிலும், மகரசங்கராந்தி தினத் தன்றும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக தவநிலையில் இருந்து அருள்நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்வதாகச் சொல்வதுண்டு.
நெய்த்தேங்காய் ஏன்?: சபரிமலை ஐயப்பனுக்கு படைக்கப்படும் பொருட்களில் நெய் அடைக்கப்பட்ட தேங்காய் பிரதான இடம் பிடித்திருக்கிறது. ஐயப்பன், வளர்ப்புத் தந்தையான பந்தள மகாராஜாவை பிரிந்துசெல்லும் போது தன்னை வருடத்தில் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் செல்லுங்கள் என்றார்.

அவர் வழி கேட்டபோது, வனத்தின் வழியே நீங்கள் வரும்போது கருடன் ஒன்று வழிகாட்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி வருடத்திற்கு ஒருமுறை மன்னர் தன் மகனை காணச்சென்றார்.
தான் அதிக பாசம் வைத்திருக்கும் மகனை காணச்செல்லும் போது ஏதாவது கொண்டு செல்ல வேண்டும். அதேசமயம் அப்பொருள் கெடாமலும் இருக்க வேண்டும். எனவேதான், மன்னர் அவருக்கு நெய் மற்றும் அதில் செய்யப்பட்ட பண்டங்களை கொண்டு சென்றார். நெய் எளிதில் கெட்டுப்போகும் பொருள் அல்ல. அதைக் குறிக்கும் வகையிலேயே இப்போதும் நெய்த்தேங்காய் கொண்டு செல்கின்றனர்.

பெண்கள் காணும் ஐயப்பன்:காட்டில் இருந்த மகன் ஐயப்பனை காணச்சென்ற தந்தை ராஜசேகர மகாராஜா அவருக்கு சூட்டி அழகு பார்க்க ரத்தின மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலீயங்கள், பதக்கம் ஆகிய ஆபரணங்களைக் கொண்டு சென்றார். இதனடிப்படையில் தற்போதும் சபரிமலையில் மகரசங்கராந்தி தினத்தன்று சுவாமிக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி தருகிறார். பெண்கள் இக்காட்சியை தரிசிக்க முடியாது என்பதால், பந்தளம் அருகிலுள்ள பெருநாடு ஐயப்பனை இந்த நகைகளால் மகரசங்கராந்திக்கு நகைகள் எடுத்துச் செல்லப்படும் முன்பு அலங்கரிப்பர். இங்கே பெண்கள் ஐயப்பனை நகையுடன் தரிசிக்கலாம்.

சபரிமலை அருகிலுள்ள சிவத்தலங்கள்:சபரிமலைக்கு செல்பவர்கள் ஐயப்பனை தரிசிப்பதோடு நின்றுவிடாமல் அருகில் இருக்கும் சிவத்தலங்களுக்கும் சென்று வரலாம். type="text/javascript">&cmt=0&postid=116400694042964658&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home