ஒரு சரித்திரம் நிகழ்ந்திருக்கின்றது- சதாம்
இந்த 2006 ஆம் ஆண்டு முடிவில் ஒரு சரித்திரம் நம் கண் முன்னே எழுதப்பட்டிருக்கின்றது. சதாம் ஒரு சர்வாதிகாரி, ஈராக் நாட்டின் இரும்புக்கரம், இன்று 30-12-2006, காலை 8.30 மணி (இந்திய நேரம்) தூக்கிலிடப்பட்டார். அவர் செய்த கொடுமைகள் எவ்வளவோ என்றாலும், ஒரு மனித உயிர் என்ற நிலையில், மனம் சிறிது பதைக்கவே செய்கின்றது.
சிங்கம் போல் வாழ்ந்து வந்த அவர், அமெரிக்காவிற்கு எதிரான போரிலும் சிங்கமாகவே போரிட்டார், ஒரு காலகட்டத்தில் அவரின் நண்பர் வட்டாரமே அவரினைக்காட்டிக்கொடுத்துவிட, நரியாக மாறி, பதுங்கு குழிகளுக்குள் வாழ்ந்துவரவேண்டிய நிலைமை, மீண்டும் ஒரு நம்பிக்கை துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புப்படையினரால் குழியிலிருந்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, வழக்குகள் நடந்து முடிந்து, தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், பல நாடுகளில் ( இந்தியா உட்பட) அவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் எல்லாம் நடந்தும், இன்றும் எதுவும் பயனளிக்காமல் , காலை 8.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.
நம் கண் முன்னே ஒரு சரித்திர துர்சம்பவம் நிகழ்ந்து நாம் அனைவருமே துரதிர்ஷ்டவசமாக அதற்கு சாட்சிகள் ஆனோம் என்பதை நினைக்கையில் மனம் ஆறாத்துயர் கொள்கின்றது. வரும் காலத்தில் என் மகன், மகனின் மகன், யாரேனும் , சதாம் உசேன் எனும் ஒரு கொடுங்கோலன் இருந்துவந்தான் என்று சரித்திரப்பாடத்தில் படித்தால், இந்த பதிவினை அவனுக்கு எடுத்துக்காண்பிக்கலாம் ,அந்த துயர சம்பவம் நடந்த நாளில் நாங்களெல்லாம் சாட்சிகளாகத்தான் இருந்தோம் என்று....அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=1&postid=116746595416857225&blogurl=http://srishiv.blogspot.com/">
1 Comments:
இந்த ஆண்டின் இறுதியில் துயரமான சம்பவம். அவர் நாட்டு பிரச்சனைக்காக அமெரிக்கா ஏன் மெனக்கிட வேண்டும்? எல்லா நாடுகளிலும் தப்பு செய்வோரை தேடி தேடி தூக்கிலிடுவார்களோ?.. வீரப்பனைக் கூட இப்படி பிடித்து தூக்கிலிடுமாறு புஷ் கிட்ட கேட்டு இருக்கலாம்.
Sunday, December 31, 2006 1:59:00 AM
Post a Comment
<< Home