இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, May 03, 2010

TNPSC தேர்வு எழுத செல்பவர்கள் கழிப்பறை செல்லக்கூடாதா?

நேற்று இங்கே திருவண்ணாமலையில் எஸ் கே பி பொறியியல் கல்லூரி என்ற ஒரு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய தொகுதி 1 (Group 1) தேர்வினை எழுத சென்றிருந்தேன். உள்ளே தேர்வு அரங்கினுள் நுழையும்போதே அறை கண்காணிப்பாளர் ஒரு அதிர்ச்சி தரும் அறிவிப்பினை கொடுத்தார், அது, தேர்வு நடக்கும் மூன்று மணி நேரமும் யாரும் அறையை விட்டு எழுந்து கழிப்பறையை பயன்படுத்த செல்லக்கூடாது என்பதே. கேட்கவே மிகவும் கொடுமையாக இருந்தது, இது தமிழக அரசினால் கொடுக்கப்பட்ட கட்டளையா அல்லது கல்லூரியில் தேர்வு நடத்தும் நடத்துனர்கள் வைத்துள்ள கட்டுப்பாடா? நீரிழிவு நோயாளிகள் இந்த தேர்வுகளை எழுத தகுதியற்றவர்களா? அல்லது தேர்வு நடக்கும் மூன்று மணி நேரமும் அவர்கள் ஏதேனும் ப்ளாஸ்டிக் பை அல்லது பாட்டில் எடுத்துச்சென்று அறையிலேயே சிறுநீர் மலம் கழித்து வைத்துக்கொண்டிருந்து தேர்வு முடிந்ததும் எடுத்து வந்து வெளியில் கொட்ட வேண்டுமா? தமிழக அரசு இது குறித்து சற்றே சிந்தித்து தேவையான ஆணைகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்குமா???????????????
type="text/javascript">&cmt=3&postid=6994423168432313730&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது