இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Wednesday, June 11, 2008

முனைவர் ஆனேன்...


இனிய தோழமைக்கு,
வணக்கம் , வாழிய நலம். சற்றே தாமதமான பதிவு என்றாலும், மேலும் அதிக தாமதத்திற்கு இடம் தராமல், இன்று பதிந்துவிடுகின்றேன்.ஏழு ஆண்டுகள்....மிக நீஈஈஈஈண்ட பயணம், 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என் ஆய்வுப்பணிக்காக இந்தியாவில் உள்ள அசாம் மாநிலம் குவஹாத்தி மாநகருக்கு சென்றேன். இந்திய தொழில்நுட்பக்கழகம்(IIT) குவஹாத்தியில் எனது ஆய்வுப்பணியை துவங்கினேன், இடுப்பு எலும்பு தேய்மானத்திற்கு மாற்றெலும்பு அல்லது மாற்று செயற்கை மூட்டு/எலும்பு தயாரிப்பதில் எனது ஆராய்ச்சி. கடந்து வந்த இடைஞ்சல்கள் எண்ணிலடங்கா.....அனைத்தையும் கடந்து , கடந்த மே மாதம் 23ஆம் நாள் (23-05-2008) , ஆன்றோர் சான்றோரால் பரிந்துரைக்கப்பட்டு முனைவன் ஆனேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், இந்த ஏழாண்டுகளில் என்மேல் அக்கறை கொண்டு என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனக்கு உற்சாகமும் , மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் ஊக்க மருந்துபோல் பேசியும் இன்று ஒரு முனைவனாக உங்கள் முன் நிற்க வைத்த பெருமை உங்களையே சாரும், அனைத்து இணைய நட்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி....மேலே இருப்பது, நான் எங்கள் தொழில்நுட்பக்கழகத்தின் இயக்குனர் பேரா.கவுதம் பருவா அவர்களிடம் இருந்து பட்டம் பெறும் வண்ணப்படம், உங்கள் வாழ்த்துக்களை வேண்டி,
உங்கள்
ஸ்ரீஷிவ்...@ சிவா...
type="text/javascript">&cmt=9&postid=8440634612487374545&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு : மென்தமிழ் இணைய இதழ்




தோழன்மீர்,

வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு குறைந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. கணிப்பொறி சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வாசிப்பதற்கு நேரம் மிகக்குறைவு.

கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் ஒரு உபாயம் தேடினோம்.

இந்த சூழலில் நண்பர்கள் சிலரின் யோசனையில் புதிதாய் உருவெடுக்கின்றது ஒரு மென்னிதழ்.

பெயர் : மென்தமிழ்
உள்ளடக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், புதிய வடிவங்கள்
வடிவம் : PDF கோப்புகளாக வெளிவரும்.

மென்னிதழ் இணைய இதழாக மட்டும் வெளிவரும்.

படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. இது கணினிவல்லுனர்களுக்கான இதழ், ஆதலால் அவர்களை மையமாக வைத்து படைப்புகள் வருதல் சிறப்பு.கணிப்பொறி சம்பந்தமான படைப்புகள் மட்டுமல்ல. எந்த படைப்புகளையும் அனுப்பலாம் . கணிப்பொறி உபயோகிக்கும் அல்லது இணையத்தில் உலாவரும் அனைவருமே இதில் அடக்கம

படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி : mentamil@gmail.comபடைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் : 30/06/2008ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வெளிவரும்.

வாசகர்கள் ஒரு மடலிட்டால் மென்தமிழின் ஒவ்வொரு இதழும் தங்கள் அஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.

வாருங்கள் நாம் கை கோர்த்து ஓரு புதிய பொலிவான உலகினை படைப்போம்.

நம்பிக்கையுடன்,

- மென்தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

http://nilavunanban.blogspot.com/2008/06/blog-post_10.html

http://vizhiyan.wordpress.com/2008/06/11/mentamil-magazine/
type="text/javascript">&cmt=1&postid=4031187455638787867&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது