இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, May 13, 2005

உனக்காக ஒரு வார்த்தை...

ஏதோ சில ஞாபகங்கள்,
யாரை என் உயிர் தோழியாக எண்ணினேனோ அவரே என் எண்ணத்திற்கு முரணாய், அவளுக்காக பரிந்து பேசப்போய் நான் இன்று மடையனாய், கடையனாய், அவள் இன்று அனைவருக்கும் நல்லவளாய், வலிக்க வைத்துவிட்டாயடி, தவறு செய்துவிட்டாய், ஒரு நல்ல நட்பை இழந்துவிட்டாய், இன்று உனக்கு மற்றவர்கள் நல்லவர்களாகத்தெரியலாம், ஆயினும் நேற்று உன் வலியைச்சுமந்தவன் நானடி, என்னைச் சிலுவை சுமக்க வைத்துவிட்டாயே? உனக்கு பிடித்த ஒரே காரணத்துக்காய் எனக்கு பிடிக்காத பலவற்றை உனக்காக சுமந்தேன், இன்று சிலுவையையும் உனக்காய்....என்ன ஒரு வித்தியாசம் தெரியுமா? இன்று நீ என் அருகில் இல்லை, பரவாயில்லை, இப்படி என் இதயம் கிழிக்க என் அருகில் நீ இருப்பதைவிட என் அருகில் இல்லாமலிருப்பதே சாலச்சிறந்ததில்லையா??

என்னத்தவறடி செய்தேன் நான்? ஏன் என்னை முட்டாளாக்கினாய்? நீ என்ன சொன்னாலும் பதிலுரைக்காமல், திருவிழாக்குழந்தையாய் தலையை தலையை ஆட்டிக்கொண்டு இருந்தேனே? அது என்ன நான் செய்த தவறா..?? தெரியவில்லையடி, ஆயினும் ஒவ்வொருமுறை அடிபடும் போதும் வலிக்கவே வலிந்த்தாலும் இந்த பாழாய்ப்போன மனது மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது உன்னைத்தானே? ஒரு பூனைக்குட்டியாய் உன் காலைச்சுற்றினேனே? இதுதானா நீ எனக்குத்தந்த பரிசு? நல்லது தோழி,
இதுவும் கடந்து போகும்...
அன்புடன்
சிவா..
type="text/javascript">&cmt=2&postid=111601248704224288&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 03, 2005

கடந்து வந்த காவியம் பகுதி 9

கடந்து வந்த காவியம் பகுதி 9

அருங்காட்சியகம்...
அது ஒருஅற்புதமான பூங்காவனம்
எத்தனையோ காதலர்களை தன்
கருவறைக்குள் சுமந்த கல்லறைத்தோட்டம்.

இந்த ஏழைக்காதலையும் ஏற்றுக்கொண்டதே
அதில் என்ன ஒரு ரத்த ஓட்டம்?
திமிங்கிலத்து எலும்பு,மானின் தலை இப்படி
திசைகள் எட்டும் திரும்பிப்பார்க்க ஒன்னா
ஒரு திவ்ய தேசம் அந்த அருங்காட்சியகம்.

இருவரும் சிறிது நேரம் உள்ளே சுற்றினோம்
பின் வெளியே வந்து ஒரு படி பார்த்து அமர்ந்துகொண்டு
பேச ஆரம்பித்தாள் என் தத்தை.
ஆஹா, ஒவ்வொரு வார்த்தைகளும்
என் காதுகளில் கவிதையாய்
ஒவ்வொரு எழுத்தும் என் செவியின் சுவையாய்..

அவளின் சகோதரி தன்னவருடன்
தனியே வேறிடம் சென்று செல்லில்
தொலைபேசிடவே, சிறிது
ஆசுவாசப்படுத்திக்கொண்டோம் நாங்கள்.
அப்பொழுதில்தான் அம்மணியின் கால் பிடித்து
கண்ணொற்றி காதலுடன் கேட்டேன்
"கண்மணியே, என்கடைசி வரை கூடவே வருவாயா?"

என்ன இது? என கடிந்து கொண்டாய் நீ,
இருப்பினும் உன் கண்ணிரண்டில்
கண்ணீர்த்துளிகள், என்மீது
அத்தனை அன்பா சிவா??
எத்தனை முறை கேட்டாய் என்னை?
மறவேன் உன்னை மணப்பேன்
என்றும் கையடித்து சத்தியம் செய்தாயே?
கனவுபோல் இல்லையடி அது,
கண்களில் இன்றும் காவியமாய்....

என் தங்கையிடம் பேச
இளங்காற்று அது வீச
லேசாக ஒலித்த என்
செல் தொலைபேசியில்
தங்கையின் குரல்...
யாரது பேசுவது? நான் தான்
நானென்றால்?.. நான் தான்.
சிரிப்பு வந்தது எனக்கு,
சொன்னேன் அவளிடம்
செல் தொலைபேசி அம்மா இது
சென்னைத்தொலைக்காட்சி அல்ல ;)

பேரைச்சொல்லவா? அது ஞாயமாகுமா?
ஹா ஹா ஹா கமலஹாசனின் பாடல்தான்
நினைவிற்கு வந்தது, சொல்லடி என்று நான்
சைகையில் சொல்ல, சொன்னாய் நீயும் உன் பெயர்...
தங்கைக்கும் நல்ல ஞாபகசக்தி என்றே சொல்லவேண்டும்
சட்டென்று உனை நினைவு கூர்ந்தாளே?
பேசி முடித்தாய், பின் உன் தங்கை
செல்லில் அழைத்தாள். மணி பார்க்க,
மாலை 4.20, வீடு போகவேண்டும்,
மீண்டும் ஆட்டோ , அண்ணா சாலை
பாரிமுனை, பிரிகிறாய் நீ..
ஆட்டோவிற்காய் கொடுக்க 10ரூபாய்
சில்லரை இல்லை என்னிடம்,
தந்த உன் பணத்தை ஆட்டோஓட்டிக்கு
அன்பளிப்பாய் பத்துரூபாய் மேலளித்து
அவள்தந்த 10 ருபாயை பொக்கிஷமாய்
என் பர்சில் பதுக்கினேன், பின்
என் விழி மலர் பிதுக்கி விடைபெற்றே
விரைந்தேன் என் தமக்கை இல்லம் நோக்கி...

அடுத்த பகுதி விரைவில்....
உங்கள் சிவா...
type="text/javascript">&cmt=0&postid=111511954449685857&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, May 01, 2005

கடந்து வந்த காவியம்-பகுதி 8

கடந்து வந்த காவியம்- பகுதி 8

உணவகத்தில் சிறு இருட்டு
என் உள்ளத்தில் இல்லை திருட்டு ;)
மனதிற்கு அமைதி தரும் பொருட்டு
அமைந்தது அந்த இருட்டு...

விடிவெள்ளியாய் என் அருகில்
அவளின் ஒளிமிகுந்த கண்கள்,
இருளினில் என் தேவதை அந்த
விண்மீனாய் விளக்காய்,
விடியலின் கிழக்காய்.

ஏதோ சொல்லவும் வருகிறாள்
பின் செல்லவும் செல்கிறாள்,
மிக மெல்லிய வெட்கத்துடன்
அவள் கைப்பை பிரித்து
ஏதோ ஒரு பொருள் எடுத்து
என் கைப்பிரித்து வைத்தாள்.

என்ன அது? எனக்குள் ஒரு கேள்வி,
வெடி குண்டா? ;)
இல்லை கல்கண்டா?:)
இரண்டும் இல்லை,
இசையுடன் கூடிய
இரு சிறு குழந்தைகள்
விசை தட்டினால்
"I love you" சொல்லியபடி
சுற்றிவந்து முத்தமிடும் ஒரு
அற்புதமான காதல் பரிசு.

நன்றி கூறிய என் தலையில்
நறுக்கென ஒரு கொட்டு )
எதற்கு எனக்கு நன்றி?
உனக்கு நீயே நன்றி சொல்வாயா?

வலிக்கவே இல்லை,
விந்தையில்லையே அது?
விதைத்தவன் அறுத்தால்
வயலுக்கு வலிக்குமா??
தாய்ப்பூனை வாயில் கவ்வ
சேய்க்கு வலிக்குமா?

"என்ன சாப்பிடற?" அவளை
முதலில் கேட்ட கேள்வி
என்று நினைக்கிறேன்.
"ஏதாச்சும் சொல்லு" அவள்
சொன்ன பதில்.

என்ன இருக்கு? என்று
காப்பாளரிடம் நான் கேட்க
எடுத்து வந்து கொடுத்தார்
உணவுப் பட்டியலை.

நிறைய உணவுகள் இருக்க
எதை உண்பது என்று ஒரு
சிறு விவாதம், அவளுக்கும்
எனக்கும் பிடித்த உணவு
என்ன இருக்கிறதென்று பார்க்க,
மீண்டும் எங்கள் கண் முன்
வந்தது, நாங்கள் பாண்டியில்
உயிர் விட்டு உண்ட
தயிர் சாதம் ;)

ஊறுகாய் தொட்டுக்கொண்டு
தயிர் சாதத்தை உயிர்சாதமாய்
உண்டோம் இருவரும்.
வழக்கம் போலவே என்
கரங்களை உபயோகிக்காமல்
கரண்டியை உபயோகிக்க,
கலங்கினாள் என் கண்மனி.

கரண்டி பிடித்து உண்டதில்ல சிவா
என மிரண்டபடியே சொன்னவளை
கன்னத்தில் தட்டிக்கொடுத்து ஆறுதலாய்
கரண்டியை விடுத்து கரத்தை எடுத்தேன்.
காதலின் சக்தி கரண்டியை விட அதிகமே :)

உணவு உண்ட பின்னர் வெளியே வந்து
என்ன வேண்டுமென்று கேட்க,
பனிக்கூழ் வேண்டுமென்றே பணித்தாள்
என்னை, தெருவெங்கும் தேட
கிட்டவில்லை அன்று பனிக்கூழ்..:(

சரி விடு என்று கூறி
சாலைக்கு வந்தோம்,
அடுத்து எங்கு? என் கேள்விக்கு
அடுக்காக பதில் இருந்தது,
கன்னிமாரா நூலகம் :)
அங்கு என்ன இருக்கு?
அழகாக வந்த பதிலில்
அகமும் மகிழ்ந்தேன்,
அப்துல்கலாம் வந்து நேற்றுதான்
திறந்து வைத்துப்போனார் அந்த
அருங்காட்சியகத்தை,
அழகாக விளம்பினாள் என் மன
அல்லி :)

ஆட்டோ பிடித்து
அபு பேலசிலிருந்து
அருங்காட்சியகம் நோக்கி
அருகமர்ந்தே சென்றோம்
ஆதர்ஷத்தம்பதிகளாய்..அங்கு....
அடுத்த பகுதியில் தொடர்வேன், உங்கள் விமர்சனங்கள் கண்டு.....:)
அன்புடன்
சிவா...
type="text/javascript">&cmt=0&postid=111501468912161503&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கடந்து வந்த காவியம்-பகுதி 7

கடந்து வந்த காவியம்-பகுதி 7

இரண்டு நாட்கள் வீட்டில்
அம்மா....அந்த வார்த்தை
அதன் சக்தி? அப்ப்ப்பா...
எவ்வளவு பாசம்?

ஆறு மாதங்களே வெளியே,
அருகமரவைத்து என்
கையில் சாதம் உருட்டி
என் பாசத்தை பிரட்டி
தந்தாயே பால் திரட்டி...

மூன்றாம் நாள் வரவே
முழு நிலவைப் பெறவே
கிளம்பினேன் சென்னை
சந்திக்கவே உன்னை.

தமக்கை வீட்டில் எனக்கு
ஒரு சிறிய பிணக்கு,
ஆனாலும் உனைப்பார்க்க
எனை அக்கா வீட்டில் சேர்க்க
வந்ததே தொலைபேசி அந்த
நிலவின் ஒலி வீசி...

எங்கு சந்தித்தோம் நாம்?
பாரி முனை....அனைத்து
பேருந்துகளும் சங்கமமாகுமிடம்,
நம் சங்கமமும் அங்குதானல்லவா?

காலை மணி பத்து என்
காவியத்தின் முத்து.
கண்டேன் உனை மீண்டும்
உன் பார்வை எனைத் தூண்டும்...

அருங்காட்சியகம் செல்ல
அந்த ஆட்டோவை அழைத்தேன் மெல்ல,
காலை மணி பதினொன்று,
நாள் நாளாக கழித்து சந்தித்த நீ
நாம் நாம் என தவித்திருந்த நான்...

முதலில் தொட்டது
உன் காலை, அதில்
மதி இழந்தேன் இந்த காளை ;)
சப்தமில்லாத அந்த கொலுசு
அதில் சலனமடைந்ததே என் மனசு...

அதிகம் பேச வார்த்தைகள் இல்லை
நாம் பேச அந்த வானமே எல்லை...
அப்போழுது தந்த அந்த பொம்மை
சாவி கொடுத்தால் தன் காதலை சொல்லுமே?
அதனுடன் கல்கியின் "பொன்னியின் செல்வன்"
எத்தனை பரிசுகள்? அதனுடன் ஒரு புகைப்படம்....

அனைத்தும் வாங்கி பின்
அதிகம் பேசி, பசியில் கேட்டேன்
உண்போமா கண்ணே?
உன்னையே உண்டுகொண்டிருக்கிறேனே?
எனக்கு எதற்கு உணவு? எத்தனை
கவித்துவமாக பேசினாயடி???

இருப்பினும் செவிக்கு உணவு முடியுமுன்
சிறிது வயிற்றுக்கும் ஈய வேண்டி,
நாங்கள் கிளம்பினோம் பஜார் பாண்டி :)
ஒரு நல்ல 5 நட்சத்திர உணவு விடுதி,
அபு பேலஸ் என்று நினைவு.....அங்கு
நாங்கள் உண்டது ஒரு தனிக்கதை,
அதை அடுத்த பகுதியில் அகவுவேன்....:)
type="text/javascript">&cmt=0&postid=111501423155973487&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கடந்து வந்த காவியம்-பகுதி 6

கடந்து வந்த காவியம்-பகுதி 6


இறுதியாக வந்ததே அந்த நாளும்
சேர்ந்தன வானில் நவ கோளும்....

முதல்முறை உன்னை காதலியாய் பார்க்க
முகம் முழுதும் முத்து முத்தாய் வேர்க்க...

ரயில் வந்து சென்னை சேரும் முன்னே
என் நினைவோடி வந்ததடி கண்ணே...:)

மூன்று நாள் பயணம் எனக்கு
என் செல்லுக்கும் மின்னுக்கும் ஒரு பிணக்கு ;)

எந்த பெட்டியில் வருகிறேன் என
சொல்ல மறந்தேன் அன்று....
அதற்காக இத்தனை தவிப்பா இன்று???

செல்லுக்கு மின்சாரம் தர வேண்டி
ரயில் நிலையம் அதனை தாண்டி
வெளியில் நானே வந்தேன் உன்
வேதனை அதனை வென்றேன்....:)

எத்தனை பெட்டிகள் பார்த்திருக்கிறாயடி?
எனக்காக இத்தனை அன்பா??
உனக்காகவே எழுதுவேனே வெண்பா :)

முதலிருந்து கடைசிவரை பார்த்து
உன் முகம் அகம் இரண்டும் வேர்த்து
நீர் அருந்த, வருந்திய முகமும்
சுருங்கிய அகமுமாய் நீ வர...

மின்னூட்டு பெற்ற என் செல்லோடு
ரயில் திரும்ப திரும்பிய நான்
தூரத்தில் கண்டேன் உன்னை
என் வாயெல்லாம் பல்லோடு ;)

ஓடி வந்து என் கை பிடித்தாய்
என் கை பிடித்து மெய் துடித்தாய்......
எத்தனை நாட்களின் முடிவு?
இது எங்கள் இருவரின் விடிவு????

அமர்ந்து பேசவே நேரமின்றி
அரக்கன் ரயிலும் கூவிடவே...
கைபிடித்து முத்தமிட்டு
பழரசம் சிறிது நீ பாதி நான் பாதி ;)

திரும்ப வருகிறேன் தாயை கண்டு
என்றே திரும்பியது என் மன நண்டு :)
பறந்ததே மன வண்டு அது கூறியது
நீயே என் பெண்டு.....:)

மனமே இல்லாது மரம் போல்
இதயம் இழந்து இரயிலில் அமர்ந்தேன்.
வீடு.....அது ஒரு அற்புதமான அனுபவம்...
எதுவுமே அழகாக தெரிகிறதே?
இதுவும் காதலின் அற்புதங்களில் ஒன்றோ???
type="text/javascript">&cmt=0&postid=111501415856596786&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது